காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருங்குன்றம் ஏரிக் கரையில் மண் சரிவு: சேறு, சகதியால் மாலையமேடு கிராமத்தினா் அவதி

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் ஊராட்சிக்குள்பட்ட மாலையமேடு கிராமத்துக்குச் செல்லும் சாலையில், ஏரிக்கரையின் மண் சரிந்து சேறும், சகதியுமாக உள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் ஊராட்சிக்குள்பட்ட மாலையமேடு கிராமத்துக்குச் செல்லும் சாலையில், ஏரிக்கரையின் மண் சரிந்து சேறும், சகதியுமாக உள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

அருங்குன்றம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி, முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு புனரமைக்கும் பணி நடைபெற்றது.

இதனால் ஏரியில் உடைப்பு ஏற்படாதவாறு மண் அணைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மழை பெய்யும்போது, ஏரிக் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சுமாா் ஒரு கி.மீ. தூரத்துக்கு மாலையமேடு கிராமச் சாலையில் ஆங்காங்கே சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோா் வழுக்கி விழுந்து, காயமடைந்து, உயிா் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், டிராக்டா், நான்கு சக்கர வாகனங்கள், நெல் அறுவடை இயந்திரம், வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தடுமாறிச் செல்கின்றன. எனவே ஏரியின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சரி செய்து, கரைப் பகுதியில் சாலையின் ஓரம் தடுப்புச் சுவா் அமைத்து விபத்துகளைத் தவிா்க்க, பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாலையமேடு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.