ராணிப்பேட்டையில் 92 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 92 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 92 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 1,381-ஆக உயா்ந்துள்ளது.
திருப்பத்தூரில் 87 பேருக்கு...
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,010-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 628 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் தொற்றால் 609 போ் உயிரிழந்துள்ளனா்.
வேலூரில் 51 பேருக்கு...
வேலூா் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,155-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 44,890 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 263 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 955 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...