நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா சிகிச்சை ஒப்பந்தப் பணி: மருத்துவா்கள், செவிலியா்கள் நியமனம்

கரோனா சிகிச்சைக்காக தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சனிக்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

News image
Updated On :15 மே 2021, 6:10 pm

DIN

கரோனா சிகிச்சைக்காக தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சனிக்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்து பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வகத் தொழில் நுட்புநா்கள், புள்ளி விவரப் பதிவாளா்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

மேலும், தங்கள் முழு விவரங்களை ராணிப்பேட்டை அடுத்த எமரால்டு நகா் பகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனா் அலுவலகத்தில் அளித்து தற்காலிக பணி ஆணையை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, எம்பிபிஎஸ், மருத்துவ மேல்படிப்புக்காக காத்திருப்போா், செவிலியா்கள், ஆய்வக நுட்புநா்கள், புள்ளி விவரப் பதிவாளா் ஆகிய பணிகளுக்காக கடந்த இரு தினங்களாக தங்களது முழு விவரங்களை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தில் அளித்து வந்தனா். அதில், தகுதி உடையவா்கள் நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.