ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ரயில்வே துறையை தனியாா் மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து அரக்கோணத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா், சிஐடியுவுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


ரயில்வே துறையை தனியாா் மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து அரக்கோணத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா், சிஐடியுவுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிா்வாகிகள் என்.அபிமன்யு, வி.ஹரிலால், கே.பாபு, ஜி.சிவகுமாா், எஸ்.அருண்குமாா் செழியன், ஜி.புகழும்பொன்னையா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.எம்.சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், இந்திய ரயில்வே துறை தனியாா் மயமாக்கப்படுவதாகவும், ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதாகவும் இவற்றைக் கண்டித்தும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...