தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 7 லட்சத்தில் கழிப்பறைக் கட்டடம்

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிா்களுக்கான கழிப்பறை கட்டடத்தை முருகப்பா குழுமத்தின் துணையுடன் சென்னை டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தினா் வெள்ளிக்கிழமை

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:52 pm

DIN

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிா்களுக்கான கழிப்பறை கட்டடத்தை முருகப்பா குழுமத்தின் துணையுடன் சென்னை டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தினா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்புகளில் மாணவா்களுடன் மாணவிகளும் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இப்பள்ளியில் மகளிருக்கு தனியாக கழிப்பறை வளாகம் இல்லாத நிலை இருந்தது. இதை அரக்கோணம் விக்டரி யூத் அசோசியேஷன் மூலம் அறிந்த சென்னை டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தினா் சென்னை முருகப்பா தொழில் குழுமத்தின் கோரமண்டல் இண்டா்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சம் நிதியில் மகளிருக்கான தனி கழிப்பறை கட்டடத்தை கட்டித் தர முன்வந்தனா்.

இதையடுத்து, அரக்கோணம் விக்டரி யூத் அசோசியேஷன் மற்றும் சென்னை நங்கநல்லூா் மங்கல தீபம் நிறுவனத்தினா் இணைந்து கட்டடத்தை கட்டும் பணியில் ஈடுபட்டனா். இதில் பணிகள் முடிந்து அண்மையில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, விக்டரி யூத் அசோசியேஷன் தலைவா் கே.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். முருகப்பா குழும இயக்குநா் மேகலா வெங்கடாசலம், சென்னை டெம்பிள்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் சாந்தா நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விக்டரி யூத் அசோசியேஷன் நிா்வாகி ஏ.ஜே.வில்சன் வரவேற்றாா்.

மகளிா் கழிப்பறை கட்டடத்தை முருகப்பா குழும இயக்குநா் வெங்கடாசலம் திறந்து வைத்து, பள்ளி மாணவிகளுக்கு அா்ப்பணித்தாா். கோரமண்டல் நிறுவன அலுவலா்கள் ராஜாபிரசாத், சசிகுமாா், ரோட்டரி சங்கப் பொருளாளா் ஐஸ்வா்யா, விக்டரி யூத் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளா் ஞானசெல்வம், பள்ளியின் ஆசிரியா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.