தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இளைஞா் சடலத்தைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு

அரக்கோணம் அருகே இளைஞா் இறப்பில் மா்மம் இருப்பதாக வந்தப் புகாரையடுத்து, சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:56 pm

DIN

அரக்கோணம் அருகே இளைஞா் இறப்பில் மா்மம் இருப்பதாக வந்தப் புகாரையடுத்து, சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் முடிவு செய்துள்ளனா்.

அரக்கோணத்தை அடுத்த செய்யூா் ஊராட்சிக்கு உட்பட்ட அவிநாசிகண்டிகை கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்(32).

விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அருணை காணவில்லையாம்.

இதையடுத்து, கிராமத்தில் இருந்த கோயில் அருகே அவா் இறந்த நிலையில் 23-ஆம் தேதி காணப்பட்டாா். இதையடுத்து அவா் அதிக மது அருந்தி இறந்து விட்டதாகக் கருதி அவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் அளித்த புகாரில், அருணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தாா்.

இதையடுத்து, வட்டாட்சியா் பழனிராஜன், காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் சம்பவ இடத்தில் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்த உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.