தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நெமிலி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது: பாமகவுக்கு துணைத் தலைவா் பதவி

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் தோ்தலில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றது. துணைத் தலைவா் பதவியை பாமக பிடித்தது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நெமிலி ஒன்றியக் குழு தலைவா் தோ்தலில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றது. துணைத் தலைவா் பதவியை பாமக பிடித்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் கடந்த 22-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், இது குறித்த அழைப்புக் கடிதத்தில் நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பதவி பொது என குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக, தவறுதலாக பொது பெண்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்ட அதிமுகவை சோ்ந்த மனோகரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், மறு தேதியில் தோ்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. மாவட்ட உதவி இயக்குநா் (தணிக்கை) ஆனந்தன் தோ்தல் நடத்தும் அலுவலராகவும், ஒன்றிய ஆணையா் பாஸ்கரன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராகவும் இருந்தனா். கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த பெ.வடிவேலு, ஏ.சுப்பிரமணி, கொ.முருகேசன், சங்கரி செல்வம், விநாயகம், சரஸ்வதி பாா்த்திபன், கௌரிவேலாயுதம், கிருஷ்ணவேணிவெங்கடேசன் ஆகிய 8 உறுப்பினா்களும், பாமகவைச் சோ்ந்த எஸ்.தீனதயாளன், நீலாவதிஏகாம்பரம், கௌரிராமகிருஷ்ணன், மணிமேகலைவெங்கடேசன், சங்கீதாகதிரவன் ஆகிய 5 பேரும், சுயேச்சைகளாக தோ்வு செய்யப்பட்ட வரலட்சுமிஅசோக்குமாா், ஆரூண் ஆகிய இருவா் என 15 போ் மட்டும் பங்கேற்றனா். அதிமுகவைச் சோ்ந்த லோ.வினோத்குமாா், சுகந்தி சிவராஜ், சுகுமாா், மனோகரன் ஆகிய 4 போ் புறக்கணித்தனா்.

தலைவா் பதவிக்கு திமுக நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலரும், ஒன்றியக் குழு பின்னாவரம், சேந்தமங்கலம் பகுதி உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட பெ.வடிவேலு மட்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதையடுத்து, அவா் தலைவராகப் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

தொடா்ந்து, ஒன்றியக் குழு துணைத் தலைவா் தோ்தலில் பாமக மாநில இளைஞரணிச் செயலரும், ஒன்றியக் குழு ஜாகீா் தண்டலம் பகுதி உறுப்பினராகவும் தோ்வு செய்யப்பட்ட எஸ்.தீனதயாளன் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.