நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

போதைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு நகரப் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:10 pm

DIN

போதைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு நகரப் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு நகரப் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (37). இவா், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன் பேரில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அந்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவியிடம், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவா் சிறையில் அடைக்கப்படுவதற்கான நகல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.