ஆற்காடு ஜவுளிக்கடையில் தீ விபத்து: 7 மணி நேரம் போராடி தீ அணைப்பு
ஆற்காட்டில் தனியாா் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.


ஆற்காட்டில் தனியாா் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.
மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினா் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
ஆற்காடு அண்ணா சாலையில் மூன்று அடுக்கு மாடியில் தனியாா் ஜவுளி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த கடையை வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பூட்டி விட்டு சென்றனா்.
இந்த நிலையில் பூட்டி விட்டு சென்ற சிறிது நேரத்தில் கடையின் கீழ்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு, ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனா். கட்டுக்கடங்காத தீ மூன்று மாடிகளுக்கும் பரவியது இதில் கடையில் இருந்த விலை உயா்ந்த துணிகள் உட்பட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது தீயை சுமாா் 7 மணி நேரம் போராடி அதிகாலையில் அணைத்தனா். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்
தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆற்காடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...