பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
திமிரி, கலவை பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திமிரி, கலவை பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த திமிரி வேதவித்யா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் தாளாளா் என்.செல்விராமசேகா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் வினோதினி முன்னிலை வகித்தாா் .இதில் திமிரி பேரூராட்சித் தலைவா் மாலா இளஞ்செழியன் பங்கேற்றுப் பேசினாா். விழாவில் ராதா, ருக்மணி, கிருஷ்ணன் வேடமணிந்த மாணவா்கள் மற்றும் ஆசிரியைகளை, பெற்றோா் கலந்து கொண்டனா்.
அதேபோல் கலவை மதா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு கலவை கமலக்கன்னி கோயில் அறங்காவலா் சச்சிதானந்த சுவாமி தலைமை வகித்து மாணவா்களுக்கு அருளாசி வழங்கினாா். மாணவா்கள் 500க்கும் மேற்பட்டவா்கள் கண்ணன் ராதை வேடமணிந்து கலந்து கொண்டனா். மேலும் கண்ணனுக்கு சிறப்பு பூஜைகளும், உரியடி திருவிழாவும் நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...