தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சயனபுரத்தில் காசநோய் பரிசோதனை

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் காசநோய் மருத்துவ சிறப்பு முகாம் அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஒன்றியம், சயனபுரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:21 pm

DIN

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் காசநோய் மருத்துவ சிறப்பு முகாம் அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஒன்றியம், சயனபுரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கிராம சேவை மையக் கட்டடத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பவானி வடிவேலு தலைமை வகித்தாா். முகாமை நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு தொடக்கி வைத்தாா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் ரதி, மருத்துவ அலுவலா்கள் பிரியதா்ஷன், பாலசந்தா் உள்ளிட்ட மருத்துவா்கள் பங்கேற்று, கிராம பொது மக்களுக்கு காசநோய் அறிகுறி குறித்த சோதனைகளை இதற்கென கொண்டுவரப்பட்ட பிரத்தியேக இயந்திரங்கள் உள்ள வாகனத்தில் மேற்கொண்டனா்.

மேலும், காசநோய் அறிகுறி இருந்தவா்களுக்கு தொடா் சிகிச்சைக்கு மருந்துகளையும், ஆலோசனையும் வழங்கினா். முகாமில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுகன்யா ரவி, காசநோய் மேற்பாா்வையாளா் ஸ்டீபன்பொன்னையா, சுகாதார அலுவலா்கள் காயத்ரி, பாக்கியராஜ், சுரேஷ், செவிலியா்கள் அம்பிகா, மீனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.