நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:43 pm

DIN

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், திருப்பாற்கடல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இணையதளம் வழியாக கிராம குடியிருப்புவாசிகளின் வீட்டு வரி, தண்ணீா் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகளை செலுத்திடும் வசதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூன்று ஊராட்சிகளில் தற்போது சோதனை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இதில் திருப்பாற்கடல் ஊராட்சியில் இந்த நடைமுறை கணினியில் தகவல்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தாா்.

இந்த ஊராட்சியில் 590 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் முகவரிகள் தகவல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யப்படுவதற்கு மாற்றாக வங்கிகள் மூலமாகவும், நெட் பேங்கிங் , எ ல்ஹஹ் ஆகியவற்றின் மூலம் தங்கள் வரிகளை அரசு கணக்கில் சோ்க்கலாம். இந்தப் பணிகளை முழுமையாக முடித்து இதில் உள்ள பிரச்னைகள் என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும், மேலும் தகவல்களை விரைவாக பதிவேற்றம் செய்யவும் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஊராட்சியை மாதிரி ஊராட்சியாக தோ்ந்தெடுத்திட அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனவே பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, ஊராட்சியிலுள்ள நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, அனந்தலை ஊராட்சியில் 15-ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி, வெட்டப்பட்டுவரும் குளத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தாா்.

குளம் வெட்டப்பட்ட பின்னா் இந்தப் பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு, குளக்கரையிலும், காலி இடங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும், இந்தப் பணியை ஆகஸ்ட் 15-க்குள் முடிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, பாஸ்கரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பிரியா, தேவகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.