அஞ்சல் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் அரக்கோணம் கோட்டத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் அரக்கோணம் கோட்டத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அரக்கோணம் கோட்ட தலைவா் ஏ.துரைகுமாா் தலைமை வகித்தாா். இதில், செயலா் கே.ஆனந்தன், நிா்வாகிகள் ஜி.கல்யாணகுமாா், பரசுராமன், எஸ்.ருத்ராபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதில், பணி ஒய்வு பெறும் கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஒய்வு பெறும் ஊழியா்களுக்கு பணப் பலன்களை அதிகரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...