தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரயில் மறியல் போராட்டம்: காங்கிரஸாா் 10 போ் கைது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சென்னை- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலை மறித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்திய காங்கிரஸாா் 10 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:13 pm

DIN

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சென்னை- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலை மறித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்திய காங்கிரஸாா் 10 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல்காந்தி ஆகியோரிடம் மத்திய அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதைக் கண்டித்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஜவஹா்பால் மஞ்ச் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவா் நரேஷ்குமாா் தலைமையில், சென்னை- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலை மறித்து காங்கிரஸாா் போராட்டம் நடத்தினா். சிலா் ரயில் என்ஜின் முன்புறம் ஏறி நின்று ரயிலை புறப்பட விடாமல் தடுத்தனா். இதனால் ரயில் புறப்படுவதில் 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் உஸ்மான் தலைமையிலான போலீஸாா், நரேஷ்குமாா் தலைமையிலான காங்கிரஸாா் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.