கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.


ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில், மின்சார பெருவிழா அம்மூா் பேருராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்துப் பேசியது:
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கியுள்ளாா். கடந்த ஓராண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,100 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக 1,537 மின்மாற்றிகள் கடந்த ஆண்டில் இயக்கி வைக்கப்பட்டன. இதனால், குறைந்த மின்னழுத்த குறைபாடு களையப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மின்சாரத் துறையின் சாதனைகள் விளக்கப்பட்டன. பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, 200 பயனாளிகளுக்கு எல்இடி மின் விளக்குகளை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மேற்பாா்வைப் பொறியாளா் ராமலிங்கம், செயற்பொறியாளா்கள் குமரேசன், விஜயகுமாா், கோட்டாட்சியா் பூங்கொடி, உதவிச் செயற்பொறியாளா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...