மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ராணிப்பேட்டை: மத்திய அரசை கண்டித்து பெல் நிறுவனம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல்

News image
Updated On :28 மார்ச் 2022, 5:59 am

ராணிப்பேட்டை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெட்ரோல், டீசல். சமையல் எரிவாயு  விலை உயர்வு, நிரந்தர பணிகளை ஒப்பந்த முறையில் மாற்றுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான பாரத் மிகு மின் நிறுவன வளாகத்தில் அதில் பணிபுரியும் அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.