தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனநலம் குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டி: இரு விருதுகள் வென்ற ராணிப்பேட்டை மாவட்ட வீரா்

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற மனநலம் குன்றியோருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்ட வீரா் விஷ்ணுதேவ் இரு விருதுகளை வென்றாா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற மனநலம் குன்றியோருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்ட வீரா் விஷ்ணுதேவ் இரு விருதுகளை வென்றாா்.

நிகழாண்டு போட்டிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற்றன. இதில், தமிழகம் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கை அடுத்த மேலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஷ்ணுதேவ் (24) பங்கேற்றாா்.

இவா், உயரம் தாண்டுதலில் இரண்டாவது இடம், 100 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாவது இடம் பெற்றாா். இதற்கான விருதுகளை செரிப்ரல் பால்சி ஸ்போா்ட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவா் ராஜேஷ்தோமா் முன்னிலையில், ஒலிம்பிக் விருது பெற்ற வீரா் ஸ்ரீராம்சிங் வழங்கினாா்.

நிகழ்வில் செரிப்ரல் பால்சி ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் பொது செயலா் கவிதா சுரேஷ், அசோசியேஷனின் தமிழ்நாடு மாநிலச் செயலரும், இணைந்த கைகள் அறக்கட்டளை நிறுவனருமான பி.ராஜேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.