அதிமுக செயலா்கள் ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம், நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம், நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி பங்கேற்று ஆலோசனை வழங்கிப் பேசியது: வரும் 17-ஆம் தேதி அதிமுகவின் பொன் விழா ஆண்டு நிறைவடைந்து, 51-ஆவது ஆண்டு தொடங்குகிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சாா்பில், மாவட்டம் முழுவதும் கட்சி நிா்வாகிகள், அனைத்து நிலைப் பொறுப்பாளா்கள் அதிமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிக் கொண்டாட வேண்டும் என்றாா். கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...