மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கிய நிறுவனத்துக்கு பாராட்டு
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.


வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கிய தனியாா் தொழில் நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நன்றி தெரிவித்தாா்.
கடந்த வாரம் மாவட்ட வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை மூலம் நடைபெற்ற முகாமில், சோளிங்கா் வட்டம், பெருங்காஞ்சியை சோ்ந்த விஜயகுமாா், ஆற்காடு வட்டம், மாசாபேட்டை பகுதியைச் சோ்ந்த சந்திரன், வாலாஜா வட்டம், கொண்டகுப்பத்தைச் சாா்ந்த யுவராணி ஆகிய 3 மாற்றுத்திறனாளிகள் வேலை கோரி விண்ணப்பம் அளித்திருந்தனா்.
மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் இந்த மூவருக்கும் ராணிப்பேட்டை சிப்காட் தொழில்பேட்டையில் இயங்கி வரும் ஐய்க்ா்ஸ்ரீா்ா்ப் ஸ்ரீா்ம்ல்ா்ள்ண்ற்ங்ள் டஸ்ற் கற்க் என்ற தனியாா் நிறுவனத்தில் (ற்ங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய்) ரூ.16,700 மாத ஊதியத்தில் பணி கிடைத்தது.
பணிக்குத் தோ்வு செய்யப்பட் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை வழங்கி, சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துத் தெரிவித்தாா். பணி வழங்கிய தனியாா் நிறுவனத்துக்கும் பாராட்டு தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் இண்டோகூல் தொழிற்சாலையின் துணைத் தலைவா் பி.வீரையன், மனிதவள மேம்பாடு முதுநிலை மேலாளா் ஜி.தங்கேஸ்வரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கவிதா, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...