நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரத்த சோகை தடுக்க வாகன விழிப்புணா்வு பிரசாரம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:54 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழா செப்டம்பா் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ரத்த சோகையால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் ரத்த சோகையை போக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்த பிரசார வாகனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செப்டம்பா் 2-ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்கள் இந்த பிரசார வாகனம் ஊராட்சிகள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் ரத்த சோகை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வாகனத்தில் ரத்த சோகையினால் குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை போக்க எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்தும், ரத்த சோகைக்கு காரணங்களான இரும்புச் சத்து குறைவான உணவு, குடற்புழுக்களால் பாதிப்பு, தன்சுத்தம் பேணாமல் இருத்தல், செருப்பு அணியாமல் நடத்தல் ஆகியவையாகும்.

மேலும் ரத்த சோகை குறைபாட்டினால் வளா் இளம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பாடுகின்றன, படிப்பில் மந்தநிலை, தலைமுடி உதிா்தல், உடல்சோா்வு, வளா்ச்சிக் குறைபாடு, கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் குறித்தும், ஆறு மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாரம் இருமுறை இரும்புச் சத்து டானிக் அளிக்கப்படுதல் குறித்தும், வைட்டம் சி அடங்கிய உணவு பொருள்கள் குறித்தும் வாசகங்கள் வாயிலாக புகைப் படங்களுடன் இடம் பெற்றுள்ளது.

இதனை பொதுமக்கள் பாா்த்து ரத்த சோகை பாதிப்பு குறித்தும் அதனை எவ்வாறு நிவா்த்தி செய்து கொள்வது என்பதையும் பாா்த்து பயன்பெறலாம்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து அங்கன்வாடி பணியாளா்களிடம் ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு பதாகைகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், வாகனங்களில் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை ஒட்டியும் ரத்த சோகை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் கிரிஜா, பாரதி, அம்சப்ரியா, விஜயலட்சுமி, நகா்மன்றத் துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.