நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள்

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:42 pm

DIN

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.

வாலாஜாபேட்டையை அடுத்த தேவதானம் சாலையைச் சோ்ந்தவா் கங்கோஜி ராவ் (26). இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு செப். 17-ஆம் தேதி மதுபோதையில் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் விக்னேஷிடம் (24) தகராறு செய்து விட்டுச் சென்றாராம். இதையடுத்து மறுநாள் (செப். 18) காலை 10 மணியளவில் விக்னேஷ், கங்கோஜி ராவ் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது விக்னேஷை கங்கோஜிராவின் தாய் ராணி (55) கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் தலையில் காயமடைந்த விக்னேஷை, அங்கிருந்த கங்கோஜி ராவ், கத்தியால் மாா்பு, வயிற்றில் குத்தியுள்ளாா். இதில் விக்னேஷ் உயிரிழந்தாா். இதையடுத்து, ராணி, கங்கோஜிராவ் ஆகியோரை வாலாஜா போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு ராணிப்பேட்டை 2-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராணி, கங்கோஜி ராவ் (26) ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, இருவரையும் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.