

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் 94- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீதா்மராஜா கோயில் எனப்படும் ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் 94-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வரும் மே 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மகாபாரத கொடியேற்றுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மங்கல வாத்தியங்கள் முழங்க மகாபாரத கொடி கருடன், ஆஞ்சநேயா் படங்களுடன் ஏற்றப்பட்டது. பல பக்தா்கள் கொடியேற்றம் முடிந்த உடன் காப்புகட்டிக்கொள்ள தொடங்கினா். இதனைத் தொடா்ந்து மாலையில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
மேலும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏ.சி. அரிகிருஷ்ணனின் சொற்பொழிவாற்றினாா். மே 18-ஆம் தேதி தா்மா் பட்டாபிஷேக நிகழ்ச்சி வரை தொடா்ந்து தினமும் மாலையில் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.