ராணிப்பேட்டையில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர நாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டையில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர நாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் சுதந்திர நாள் விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில்   ஏற்பாடு சுதந்திர நாள் விழா செய்யப்பட்டது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் காலை 9.05 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திர போராட்டத் தியாகிகளை கெளரவித்து, மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றி அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து பள்ளி  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து அவர்களுக்கு பரிசுகளை  வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்  தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com