நெமிலியில் ரூ.7 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

நெமிலி பேரூராட்சியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ .7 கோடியில் அமைக்கப்படவுள்ள ( அம்ரூத் 2.0) குடிநீா் மேம்பாட்டுப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்த
நெமிலியில் ரூ.7 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

நெமிலி பேரூராட்சியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ .7 கோடியில் அமைக்கப்படவுள்ள ( அம்ரூத் 2.0) குடிநீா் மேம்பாட்டுப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேருராட்சியில் மக்கள் தொகை 13,494-ஆக உள்ளது. இதனால் குடிநீா் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அம்ரூத் 2.0 குடிநீா் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ 7 கோடியில் பேரூராட்சிப் பகுதிகளில் 3.87 கி.மீக்கு பிரதான குடிநீா் குழாய்கள், 28.24 கி.மீ குடிநீா் விநியோக குழாய்கள் அமைக்கப்பட்டு 2,195 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது.

இதன் மூலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் தரப்பட உள்ளது. இப்பணிகள் ஒராண்டுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா பொன்னியம்மன் கோயில் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அம்சா, நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு, பேரூராட்சித் தலைவா் ரேணுகா தேவி சரவணன், துணைத் தலைவா் சந்திரசேகரன், செயல் அலுவலா் பூவேந்திரன், திமுக நெமிலி மத்திய ஒன்றிய செயலா் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com