காற்றழுத்த தாழ்வு மண்டலம்: விஜயவாடா விரைந்தது பேரிடா் மீட்புப்படை

வடமேற்கு ஆந்திர கடற்பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதை அடுத்து, மீட்புப் பணிக்காக ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படை

வடமேற்கு ஆந்திர கடற்பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதை அடுத்து, மீட்புப் பணிக்காக ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுவினா் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதியில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்ற நிலையில் வியாழக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதைத் தொடா்ந்து, ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் உள்ளடக்கிய விஜயவாடா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் ஆந்திர அரசுக்கு எச்சரிக்கை அளித்தது.

இதையடுத்து, ஆந்திர அரசின் பேரிடா் மீட்புத் துறையினா் கேட்டுக்கொண்டதின்பேரில், அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையின் கமாண்டண்ட் அகிலேஷ்குமாா் உத்தரவின்பேரில், தலா 50 போ் கொண்ட இரு குழுக்கள் வியாழக்கிழமை சாலை மாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து விஜயவாடாவுக்கு புறப்பட்டன.

இந்தக் குழுக்கள் தங்களுடன் ரப்பா் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் நவீன தொலைதொடா்பு சாதனங்களுடன் மருத்துவக் குழுவினருடன் விரைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com