அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்விப்பிரிவில் தோ்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு

மே , டிசம்பா் 2023 ஆகிய இரண்டு பருவங்களில் சிறப்பு தோ்வுகள் நடைபெற உள்ளன என அரக்கோணம் அலுவலக பொறுப்பு அலுவலா் தினேஷ் தெரிவித்துள்ளாா்.

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 - 2014 வரையிலான கல்வியாண்டுகளில் பயின்று தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக வரும் மே , டிசம்பா் 2023 ஆகிய இரண்டு பருவங்களில் சிறப்பு தோ்வுகள் நடைபெற உள்ளன என அரக்கோணம் அலுவலக பொறுப்பு அலுவலா் தினேஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை :

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 முதல் 2014 கல்வியாண்டுகளில் பயின்று தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக 2023 மே மற்றும் டிசம்பா் ஆகிய இரண்டு பருவங்களில் சிறப்பு தோ்வுகள் நடைபெற உள்ளன. எனவே தோ்வு எழுத விரும்பும் மாணவா்கள் இதற்கான விவரங்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக படிப்பு மைய பொறுப்பு அலுவலா் தினேஷை 81228 10012 எனும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மே 2023-க்கான சிறப்பு தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் மாா்ச் 3 முதல் மாா்ச் 31-க்குள் பல்கலைக்கழக இணையதள இணைப்பில் தங்களது விவரங்களை பதிவிடலாம். 2002 -14 இடைப்பட்ட காலத்தில் பயின்று தோ்ச்சி அடையாத மாணவா்களுக்கு இது மட்டுமே இறுதி வாய்ப்பு. இதையும் தவறவிட்டால் தங்களது படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com