ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வேன் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வேன் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Updated On :2 ஏப்ரல் 2024, 5:19 pm

ஆற்காடு: ஆற்காடு அருகே வேன்மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா் ஆற்காடு வட்டம், கிராம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சிவா மகன் ஹரிகரன் (18) அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சக்திவேல் (19), அருகே உள்ள கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த அருண் மகன் பிரகாஷ் (18, ). இவா்கள் மூவரும் கலவை தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா்.

நண்பா்களான இவா்கள் ஒரே பைக்கில் திங்கள்கிழமை கலவை சென்று இரவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, கனியன்தாங்கல் கிராமம் அருகே எதிரே வந்த வேன் மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் கலவை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு ஹரிகரன் உயிரிழந்தாா். மேலும் இருவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்தபுகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.