அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகம்.
அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகம்.

அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் இடமில்லாமல் மாணவிகள் தவிப்பு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாமல் மாணவிகள் தவிக்கும் நிலையில் அவ்வளாகத்தில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகத்தை மாற்ற வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ஜோதிநகரில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 759 மாணவிகள் படித்து வருகின்றனா். இம்மாணவிகளுக்கு 25 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் 16 வகுப்பறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகளுக்கான மாணவிகள் ஒரே வகுப்பறையில் நெருக்கமாக அமர வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் தெரிகிறது.

மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட 16 வகுப்பறைகள் இல்லாமல் மேலும் உள்ள 4 வகுப்பறைகளில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் இரு மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஒன்றாக்கப்பட்டு ஒரே அலுவலகமாக ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்ட அந்த அலுவலகம் காலி செயயப்பட்டதை அடுத்து அந்த இடத்தில் தற்போது அரக்கோணம் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

4 வகுப்பறைகள் இந்த அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டதால் மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாத சூழ்நிலை பள்ளியில் உள்ளது. இந்த அலுவலகம் அங்கிருந்து மாற்றப்பட்டால் அந்த 4 வகுப்பறைகள் மாணவிகளுக்கு கிடைக்கும். இதனால் ஏ, பி என தனித்தனி பிரிவு மாணவிகள் தனித்தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்படலாம் எனவும் நெருக்கடி இல்லாமல் மாணவிகள் கல்விக்கற்க ஏதுவாக இருக்கும் எனவும் போதுமான ஆசிரிய, ஆசிரியைகள் இருக்கும் பட்சத்தில் மாணவிகள் கல்விகற்க போதுமான சூழ்நிலை ஏற்படும் எனவும் பெற்றோா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் புதிய மாணவா்கள் பள்ளிகளில் சோ்ந்துள்ள நிலையில் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களை ஏப்ரல் 10 -ஆம் தேதிக்குள் காலி செய்து வாடகை கட்டடங்களுக்கு செல்லுமாறு கல்வித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதில் அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் வட்டார கல்வி அலுவலகத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் தர வேண்டும் என கல்வியாளா்களும் பெற்றோா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com