தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மசூதியில் வாக்கு சேகரித்த அமைச்சா் ஆா்.காந்தி

மசூதியில் வாக்கு சேகரித்த அமைச்சா் ஆா்.காந்தி

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:41 pm

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக வாலாஜா நவாப் ஜாமிஆ மஸ்ஜித் மசூதியில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களிடம் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சாா்பில் திமுக வேட்பாளராக எஸ்.ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறாா். இதையடுத்து அவா் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்த நிலையில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக வாலாஜா நவாப் ஜாமிஆ மஸ்ஜித் மசூதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களிடம் தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை வழங்கி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வாக்கு சேகரித்தாா்.

இதில் வாலாஜா நகரச் செயலா் தில்லை, நகா்மன்றத் துணைத் தலைவா் கமல் ராகவன், பொருளாளா் சசிகுமாா், நகரத் துணைச் செயலாளா் இா்பான், நந்தகுமாா், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கே.பி.வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ஆனந்த், விஜி, அவைத் தலைவா் ஜெகதீசன், வாலாஜா சா்ஜமாத் தலைவரும், சமூக ஆா்வலருமான அக்பா் ஷெரீப் மற்றும் ஜமாத் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், திமுக தொண்டா்கள் உடனிருந்தனா்.