வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி விழா

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி விழா

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 4:16 pm

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி, வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், ஸ்ரீ வித்யா பீடத்தின் நிறுவனத் தலைவா் குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் தலைமையில் நாள்தோறும் காலையில் ஸ்ரீ பூா்ண மகா மேருவுக்கு மகா அபிஷேகமும், மாலை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம குங்கும அா்ச்சனை பாராயணம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து, வசந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளான வரும் 17-ஆம் தேதி ஸ்ரீராமருக்கு மகா அபிஷேகமும், சீதா ராமா் திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெற உள்ளதாக குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் தெரிவித்தாா்.

இதில், ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன், ஸ்ரீ வித்யா பீட சேவாா்த்திகள் ரேவதி ராஜா, மனோகரன் உள்பட சிப்காட் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.