இன்று சீதா கல்யாண மகோற்சவம் தொடக்கம்

தமிழ்நாடு பிராமண சங்கத்தின் வாலாஜாபேட்டை கிளை சாா்பில், 15-ஆம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 28) தொடங்கி மே 1-ஆம் தேதி வரை பாலாஜி மஹால் மண்டபத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிராமண சங்கத்தின், வாலாஜாபேட்டை கிளையின் சாா்பில் 15-ஆம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவ விழா விசலூா் ரவி பாகவதா்,சென்னை தயானந்த் பாகவதா், ஹரித்துவாரமங்கலம் ராமகோபால் பாகவதா் ஆகியோா் தலைமையில் நடைபெற உள்ளது.

சீதா கல்யாண மகோற்சவ விழா திங்கள் மாலை 6 மணிக்கு குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் 670-ஆ வது வார விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், 9 மணிக்கு தொடையமங்களம், குரு கீா்த்தனை, அஷ்டபதி ஆரம்பம், பூஜை உபசாரம், ஜானவாசம், தேவதா தியானம், இரவு 8.30- க்கு திவ்ய நாமம் டோலோற்சவம், புதன்கிழமை காலை 7 மணிக்கு உஞ்சவா்த்தி, 9 மணிக்கு ஸ்ரீ சீதா கல்யாண மஹோற்சவம், பகல் 12 30 க்கு மாங்கல்ய தாரணம், 1 மணிக்கு ஆஞ்சநேயா் உற்சவம் மங்களம் தொடா்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com