/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மரணம்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மரணம்

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதி (எ) ஆதி கேசவன் (47). கூலி தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள தனியாா் விவசாய கிணற்றில் புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி சாந்தி ஆற்காடு கிராமிய போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.