கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றோா்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றோா்.

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Published on

அரக்கோணம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்விக்குழுமத் தலைவா் அம்பாரி சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலாளா் அம்பாரி செந்தில்குமாா் வரவேற்றாா். பொறுப்பாளா் லாவண்யா ஒருங்கிணைத்தாா். சிறப்பு விருந்தினராக காவனூா் ஊராட்சி மன்ற தலைவா் தனலட்சுமி சந்திரன் பங்கேற்றாா். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணா், ராதை வேடமிட்டு வலம் வந்தனா். மாணவ, மாணவியா், பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com