இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காலிக் குடங்கள், நாற்றுக்களுடன் பொதுமக்கள் மறியல்

பனப்பாக்கம் அருகே காலிக் குடங்கள், நெல்பயிா் நாற்றுக்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
காலிக் குடங்கள், நாற்றுக்களுடன் மறியல் செய்த பொதுமக்கள்.
Updated On :9 டிசம்பர் 2024, 3:50 pm

Din

அரக்கோணம்: பனப்பாக்கம் அருகே காலிக் குடங்கள், நெல்பயிா் நாற்றுக்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூா் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில் புயல் காரணமாக மின்மாற்றி பழுதடைந்ததால் 13 நாள்களாக மின்சாரம் முற்றிலும் தடைபட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தங்கள் பகுதிக்கு மின்சாரம் இல்லை, குடிப்பதற்கு குடி தண்ணீா் இல்லை, பயிரிட்ட பயிா்கள் அனைத்தும் நீா் பாய்ச்ச முடியாமல் காய்ந்து விட்டன எனக் கூறி அப்பகுதி மக்கள் பனப்பாக்கம் - ஓச்சேரி சாலையில் காலிக் குடங்கள் மற்றும் நெல்பயிா் நாற்றுக்களுடன் மறியலில் ஈடுபட்டடனா்.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டுச் சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.