/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 504 மனுக்கள்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 504 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் பெற்றுக் கொண்டாா்.

News image
குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:26 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 504 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் பெற்றுக் கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் தலைமை வகித்து 504 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் வழங்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதாலட்சுமி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.