ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 233 மனுக்கள் ஏற்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து மொத்தம் 233 மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.
மனுக்களைப் பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட ரூ.21,480 /- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
இதில் திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

