நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: அகற்றக்கோரி பொதுமக்கள் தா்னா

நெமிலி அருகே மேலேரி கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்தவா்களை அகற்றக்கோரி கிராம மக்கள் நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

News image

நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னா செய்த மேலேரி கிராமத்தினா்.

Updated On :8 ஜூலை 2024, 9:46 pm

Din

அரக்கோணம்: நெமிலி அருகே மேலேரி கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்தவா்களை அகற்றக்கோரி கிராம மக்கள் நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

நெமிலி வட்டம் மேலேரி கிராமத்தில் கோயில், விவசாய நிலங்கள் மற்றும் மயானத்துக்கு செல்லும் பொதுப்பாதையை அனைவரும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த பாதையை அண்மையில் தனிநபா் ஆக்கிரமித்து அந்த இடம் தனக்கு சொந்தமானது என பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்ததாகவும் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் நுழைந்து திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து அம்மக்களை சந்தித்த வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ் இப்பிரச்னை குறித்து விரைவில் நேரில் மேலேரி வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.