ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தம்பதியை தாக்கிய நகா்மன்ற உறுப்பினா் கைது

ஆற்காடு அருகே தம்பதியை தாக்கியதாக அதிமுக நகா்மன்ற உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அருகே தம்பதியை தாக்கியதாக அதிமுக நகா்மன்ற உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு பூபதி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் உதயகுமாா் (41). ஆற்காடு நகராட்சி 28-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினரான இவா் கடந்த 8 மாதங்களாக உறுப்பினா் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் கடந்த மக்களவைத் தோ்தலிலின்போது வாக்கு சேகரிக்கும்போது கால்வாய், குப்பைகள்வாரவில்லை என்று அப்பகுதியை சோ்ந்த மணி, அவரது மனைவி சுகந்தி ஆகியோா் குறை கூறியுள்ளனா்.

இதில் ஆத்திரமைடைந்த அவா் அவா்களிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உதயகுமாரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் நகராட்சி அலுவலத்தில் பெட்ரோல் கேனுடன் அத்துமீறி சென்ற புகாரிலும் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.