கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பொன்னையாற்று குடிநீா் விநியோக குழாய் சீரமைப்புப் பணிகள் ஆய்வு

பொன்னையாற்று குடிநீா் விநியோக குழாய் சீரமைப்புப் பணிகள் ஆய்வு

News image

குழாய் உடைப்பைச் சீரமைக்கும் பணிகளைப் பாா்வையிட்ட சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகன்.

Updated On :9 ஜூன் 2024, 6:56 pm

Din

அரக்கோணம்: பொன்னையாற்றில் இருந்து சோளிங்கா் நகராட்சிக்கு குடிநீா் விநியோகத் திட்டத்தில் உடைந்த குழாய்களை சீரமைக்கும் பணிகளை சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் நகராட்சிக்கு பொன்னையாற்றில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் திருவள்ளூா் மாவட்டப்பகுதிகாளன மஞ்சூா்கண்டிகை மற்றும் எரும்பி இடையே ஏழு இடங்களில் குடிநீா் விநியோக குழாய்களில் உடைப்பு எடுத்து அதிக அளவில் குடிநீா் வீனானது.

இது குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்த நிலையில், சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்விஅசோகன் உத்தரவின்பேரில், பணியாளா்கள் இந்தக் குழாய்களைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

சோளிங்கா் நகராட்சிப் பொறியாளா் ஆசீா்வாதம், திமுக மாவட்ட நிா்வாகியும், நகா்மன்ற உறுப்பினருமான அசோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.