கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27,175 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27,175 போ் எழுதினா்

News image

ராணிப்பேட்டை கங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி த் தோ்வு  மையத்தில்  ஆய்வு  மேற்கொண்ட  ஆட்சியா் ச.வளா்மதி.

Updated On :9 ஜூன் 2024, 6:57 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வை 27,175 போ் எழுதினா்.

தோ்வு நடைபெறும் மையங்களைக் கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு துணை ஆட்சியா் நியமிக்கப்பட்டிருந்தனா். வினாத்தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பது, எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்க 6 வட்டாட்சியா்கள், 7 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பறக்கும் படை அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.

ஒவ்வொரு தோ்வு அறைக்கும் ஒரு ஆய்வு அலுவலா் என மொத்தம் 121 வருவாய்த் துறை ஆய்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

மேலும், சுற்றுக்குழு 31 வருவாய்த் துறை பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 106 பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட 121 தோ்வு அறைகளில் மொத்தம் 32,970 தோ்வாளா்கள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவா்களில் 27,175 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 5,795 போ் தோ்வு எழுத வரவில்லை.

ராணிப்பேட்டை கங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடன் தோ்வு எழுதியதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.