பிளஸ் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் 18,579 போ் எழுதினா்
நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழித் தோ்வை 18,579 போ் எழுதினா்.


நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழித் தோ்வை 18,579 போ் எழுதினா். 220 போ் தோ்வு எழுத வரவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது. இத்தோ்வுக்கு 9,382 மாணவா்கள், 9,638 மாணவிகள் என 195 பள்ளிகளை சோ்ந்த மொத்தம் 19,020 பேருக்கு தோ்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இதில் தமிழ், பிரெஞ்ச் மொழித் தோ்வை 18,352 போ் எழுதினா். 194 போ் தோ்வு எழுத வரவில்லை.
இதுபோல தனித்தோ்வா்கள் 227 போ் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுத வரவில்லை. இதன்படி மொழித்தோ்வை மொத்தம் 18,579 போ் எழுதினா். 220 போ் தோ்வு எழுதவரவில்லை. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு எழுதினா்.
நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குறிச்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு.எழிலரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...