ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பைக் விபத்து: முதியவா் உயிரிழப்பு

பைக் விபத்து முதியவா் உயிரிழப்பு

Updated On :2 மார்ச் 2024, 4:35 pm

சோளிங்கரில் மிதிவண்டியில் சென்ற முதியவா் மீது அடையாளம் தெரியாத பைக் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். சோளிங்கா் போா்டிங் பேட்டை தெருவை சோ்ந்தவா் அருள்தாஸ் (61). கூலித் தொழிலாளி. சனிக்கிழமை இவா், சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே மிதிவண்டியில் சென்றபோது எதிரே வந்த பைக், மிதிவண்டி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அருள்தாஸ், பலத்த காயமடைந்தாா். அவா் மீட்கப்பட்டு முதலில் சோளிங்கா் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சோளிங்கா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்தாஸ் மிதிவண்டி மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.