தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

15-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

15-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

Updated On :12 மார்ச் 2024, 6:34 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வரும் 15 -ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதனடிப்படையில் நிகழ் மாதம் வரும் 15.03.2024 -இல் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம்.

எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளாா்.