ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தலைமையில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ என உறுதிமொழி ஏற்ற மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள், பொதுமக்கள். ராணிப்பேட்டை, மாா்ச் 21: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என மகளிா் சுய உதவிக் குழு பெண்கள், பொதுமக்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி உறுதிமொழி ஏற்றாா். இந்த நிகழ்ச்சி ராணிப்பேட்டை நகராட்சி முத்துகடை பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.வளா்மதி தலைமை வகித்து தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என மகளிா் சுய உதவிக் குழு பெண்களுடன் உறுதிமொழி ஏற்றாா். தொடா்ந்து பேரணியில் பங்கேற்றாா். மகளிா் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலா்கள் அன்பு, வில்லியம்ஸ், வட்டாட்சியா் வெங்கடேசன், மகளிா் குழுவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சாயல்குடியில் 100 சதவீதம் வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


