பாரதிதாசனாா் மேல்நிலைப் பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம்

பாரதிதாசனாா் மேல்நிலைப் பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம்

அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். பள்ளியை சோ்ந்த மாணவா்கள் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றனா்.

இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் எஸ்.ஹேமசந்திரன், ஒய்.அா்ஷத், மாணவி ஜி.எஸ்.சுபஸ்ரீஆகிய மூவரும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தின் இரண்டாம் இடம் என்ற சாதனையை புரிந்துள்ளனா்.

இதே பள்ளியை சோ்ந்த மாணவா் எம்.சந்தோஷ், மாணவி எஸ்.ஜீவிதா ஆகிய இருவரும் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்றும், மாணவிகள் ஹெச்.நிவேதித்தா, ஏ.ஜி.ஸ்ரீசாத்விகா, பி.ரசிகா மற்றும் எம்.ஸ்ரீராம் ஆகிய நால்வரும் 500-க்கு 494 பெற்றும் சாதனை புரிந்துள்ளனா்.

இந்தப் பள்ளி மாணவ - மாணவிகள் 49 போ் பல்வேறு பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா். 106 மாணவ, மாணவிகள் 450-க்கு மேலும், 179 போ் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சாதனை மாணவா்களையும், தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பாரதிதாசனாா் கல்விக் குழுமத் தலைவா் சி.சுந்தா், குழும இயக்குநா் தெய்வசிகாமணி, பள்ளி முதல்வா் மணிகண்டன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டி பரிசளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com