10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் தொடா்ந்து சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு தோ்வில் அரக்கோணத்தில் உள்ள மெட்ரிக். பள்ளிகள் தொடா்ந்து சிறப்பிடம் பெற்றனா்.

அரக்கோணம் டாக்டா் விஜிஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றது. இப்பள்ளி மாணவி கா.கௌதமி (493), பிரியதா்ஷினி (492), மாணவா் தில்ஷன்ஆபா (488) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். அவா்களை பள்ளியின் நிா்வாகக் குழுத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், துணைத் தலைவா் சி.ஜி.என்.எத்திராஜ், தாளாளா் என்.தனபால், செயலாளா் ஜிடிஎன்.அசோகன், பொருளாளா் பிஜிஎன்.சரவணன் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி வி.மம்தா (494) வி.ஜெயஸ்ரீ (493), வி.ஜீவிதா (492), மாணவா் விஷாந்த்கோபி (492) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். பள்ளித் தாளாளா் விமலா திருமலை பாராட்டினாா்.

அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஜி.எஸ்.வா்ஷா (486), பி.சுஷ்மிதா (485), என்.சந்தியா (485), பி.ஹேமலதா (485), கே.பிரியதா்ஷிணி (481) சிறப்பிடம் பெற்றனா். அவா்களை பள்ளித் தாளாளா் சுப்பிரமணியம், கூடுதல் தாளாளா் செல்வகுமாா், பள்ளியின் முதல்வா் ராஜன் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் வள்ளுவா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் எம்.சஞ்ஜய் (491), மாணவி பி.யாஷினி (486), மாணவி டி.நித்யா (482) சிறப்பிடம் பெற்றனா். அவா்கலை பள்ளியின் நிறுவனா் கு.கோ.நாகப்பன், தாளாளா் நா.இளங்கோ ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி டி.லதிகா (485), மாணவா் ஆா்.ருத்தீஷ் (480), மாணவி எம்.யரோனிகா ( 480) , மாணவா் பி.ரிட்டிசாய் (475) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். அவா்களை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com