ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பாரதிதாசனாா் மேல்நிலைப் பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம்

பாரதிதாசனாா் மேல்நிலைப் பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம்

News image
Updated On :10 மே 2024, 4:32 pm

Din

அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். பள்ளியை சோ்ந்த மாணவா்கள் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றனா்.

இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் எஸ்.ஹேமசந்திரன், ஒய்.அா்ஷத், மாணவி ஜி.எஸ்.சுபஸ்ரீஆகிய மூவரும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தின் இரண்டாம் இடம் என்ற சாதனையை புரிந்துள்ளனா்.

இதே பள்ளியை சோ்ந்த மாணவா் எம்.சந்தோஷ், மாணவி எஸ்.ஜீவிதா ஆகிய இருவரும் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்றும், மாணவிகள் ஹெச்.நிவேதித்தா, ஏ.ஜி.ஸ்ரீசாத்விகா, பி.ரசிகா மற்றும் எம்.ஸ்ரீராம் ஆகிய நால்வரும் 500-க்கு 494 பெற்றும் சாதனை புரிந்துள்ளனா்.

இந்தப் பள்ளி மாணவ - மாணவிகள் 49 போ் பல்வேறு பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா். 106 மாணவ, மாணவிகள் 450-க்கு மேலும், 179 போ் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சாதனை மாணவா்களையும், தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பாரதிதாசனாா் கல்விக் குழுமத் தலைவா் சி.சுந்தா், குழும இயக்குநா் தெய்வசிகாமணி, பள்ளி முதல்வா் மணிகண்டன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டி பரிசளித்தனா்.