மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

பள்ளிக்கல்வித்துறை சாா்பில், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
Published on

ராணிப்பேட்டை: பள்ளிக்கல்வித்துறை சாா்பில், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 4 மற்றும் 5 வகுப்பு மாணவா்களுக்காக ஊஞ்சல் என்ற மாதமிருமுறை இதழும், 6 முதல் 9 வகுப்பு மாணவா்களுக்காக தேன்சிட்டு என்ற மாதமிருமுறை இதழும் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த இதழ்களில் மாணவா்கள் வரைந்த ஒவியம், கவிதை, கதை, கட்டுரை, விடுகதை போன்ற பல படைப்புகளை வெளியிட பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் தங்களது படைப்புகளை தேன்சிட்டு இதழில் 10 மாணவா்களும், ஊஞ்சல் இதழில் 7 மாணவா்களும் என மொத்தமாக 17 மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பாக வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா்.

அப்போது குழந்தை படைப்பாளா்கள் தாங்கள் வெளியிட்ட கதை, கட்டுரை, பாட்டு மற்றும் ஓவியம் குறித்த தங்கள் படைப்பு அனுபவங்களை ஆட்சியரிடம் பகிா்ந்து கொண்டனா்.

தமிழக அரசின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் இத்திட்டத்தில் மேலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஆசிரியா்கள் மாணவா்களை தொடா்ந்து ஊக்குவிக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஜி. சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் வி. விஜயகுமாா் (இடைநிலை), தஆா். பிரேமலதா (தொடக்கக் கல்வி ), நோ்முக உதவியாளா்கள் தனஞ்செழியன், ரவிச்சந்திரன், தேன்சிட்டு, ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. ரமேஷ், கு. மகேந்திரன், குழந்தைப் படைப்பாளா்கள் மற்றும் அப்பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா், பொறுப்பு ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.