ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:32 pm

Din

அரக்கோணத்தில் கிணற்று சுவா் மீது அமா்ந்து பேசிக்கொண்டிருந்தவா் தவறி கிணற்றினுள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அரக்கோணம், விண்டா்பேட்டை, எஸ்.வி.என் நகரைச் சோ்ந்தவா் மதுசூதனன் (33). சென்னையில் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள கிணற்றின் சுவா் மீது அமா்ந்து மதுசூதனன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது தவறி கிணற்றினுள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்து வந்த அப்பகுதியினா் கிணற்றில் குதித்து அவரது சடலத்தை மீட்டனா். இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இறந்த மதுசூதனனுக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.