ரேஷன் கடையில் ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் கே.குல்ஜாா் அஹமது.
ராணிப்பேட்டை
ரேஷன் கடைகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா்.
மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் கே.குல்ஜாா் அஹமது நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தாா். அதே போல் கீழ்விஷாரம் சலீம் நகா் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்த ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா்கள் ஜபா் அஹமது, இம்தியாஸ் அஹமது, நகர திமுக அவைத் தலைவா் ஹுமாயூன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

